300 பயணிகளுடன் குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயற்சித்த விமானி: மன்னிப்பு கோரிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் விமானி குடிபோதையில் விமானத்தை எடுக்க முயற்சித்தபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 300 பயணிகளுடன் லண்டனில் இருந்து Mauritius- க்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, விமானியிடமிருந்து ஆல்கஹால் மனம் வீசியுள்ளது. இதனை அறிந்த விமான ஊழியர்கள், விமானி குடிபோதையில் விமானத்தை இயக்க முயற்சிப்பது, அனைவரின் உயிருக்கு ஆபத்து என்பதால் 999க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பொலிசார் விமானியை விமானத்திலிருந்து இழுத்து சென்றனர். காலை 8.30க்கு புறப்பட வேண்டிய விமானம், மாற்று விமானியை ஏற்பாடு செய்வதற்கு தாமதமானதால் 10.30 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

விமானியின் இந்த செயலுக்கா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கோரியுள்ளது, எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், இதனால் தான் நாங்கள் பொறுமையாக இந்த விடயத்தை கையாண்டோம் என கூறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்