பிரித்தானியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குடிசை வீடு இதுதான்!

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

மின்சாரம், கழிவறை வசதிகள் இல்லாத மரத்தால் ஆன குடிசை 295,000 பவுண்ட்டுக்கு பிரிட்டனில் விற்பனை ஆகி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரித்தானியாவிலேயே, மிக அதிகவிலைக்கு விற்கப்பட்ட குடிசை இது தான் என கூறப்படுகிறது, Mudeford Spit in Christchurch, Dorsetல் அமைந்துள்ள இந்த குடிசை, இதற்கு முன் 280,000 பவுண்டுக்கு விற்பனையான வேறொரு குடிசையின் சாதனையை இந்த குடிசை முறியடித்துள்ளது.

இதே விலைக்கு 6 அறைகள் கொண்ட வீட்டையும், 3 அறைகள் கொண்ட வீட்டையும் நாம் வாங்கியிறுக்க முடியும்

குடிசை உரிமையாளர் கூறியதாவது, இதில் அதிகபட்சமாக 5 பேர் வரை இதில் சவுகரியமாக இருக்க முடியும் ஆனால் இரவு நேரத்தில் இங்கு தூங்குவது கடினமான விஷயம் ஆகும், குடிசையின் விலையேற்றத்திற்க்கு இதுவும் ஒரு காரணம் என்றார்.

இது, கடற்கரைக்குச் செல்லும் வழியில் பிரபலமாக இருப்பதாலும் , சில கடற்கரை அழகிய இடங்களில் மக்கள் பார்வைக்கு ஏற்றார் போல் தெரிவதும் குடிசையின் சிறப்பாகும்.

இந்த குடிசையில் சூரிய ஒளியால் மின்சாரம் வழங்கப்படுகிறது, கூரையில் சூரிய மின் உற்பத்தி பேனல்கள் உள்ளன. இவற்றால் ஒரு குக்கர் மற்றும் குளிர்சாதனப்பெட்டியை சூரிய மின்கலங்கள் மூலம் பயன்படுத்த முடியும்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்