பிரித்தானியாவில் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்கும் மக்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் விற்பனை நிறுவன அழைப்புகளை தவிர்க்கும் பொருட்டு பெரும்பாலான மக்கள் தரைவழி தொலைபேசி அழைப்புகளை கண்டுகொள்ளாமல் விடுவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் சுமார் 300 மில்லியன் அழைப்புகள் ஆண்டுதோறும் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியர்கள் மாதம் ஒருமுறையேனும் பெற்றோரிடம் இருந்து வரும் அழைப்புகளையோ அல்லது அலுவகத்தில் இருந்து வரும் அழைப்புகளையோ தவற விடுவதாக தெரியவந்துள்ளது.

ஆனால் சுமார் 55 விழுக்காடு மக்கள், தரைவழி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தினர் தேவையற்ற அழைப்புகளை தடை செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் சுமார் 4.8 பில்லியன் தேவையற்ற அழைப்புகளை பிரித்தானியர்கள் எதிர்கொள்வதாகவும், இதில் 1.7 பில்லியன் அழைப்புகள் விற்பனை தொடர்பானது எனவும், 940 மில்லியன் அழைப்புகள் பதிவு செய்யப்பட்ட விற்பனை செய்திகள் எனவும் 200 மில்லியன் எண்ணிக்கையில் கைவிடப்பட்ட அழைப்புகள் எனவும் Ofcom தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்