பொது வெளியில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் செய்த செயல்: நெகிழ்ந்த மக்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிறுவனிடம் அவர் காட்டிய அக்கறை பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இளவரசர் வில்லியம் மற்றும் அவர் மனைவி கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள Coventry நகருக்கு வந்தார்கள்.

அரச குடும்பத்தினரை காண சாலை இரு பக்கத்திலும் மக்கள் ஆர்வமாக நின்றிருந்தனர்.

நின்றிருந்த எல்லோரிடமும், வில்லியமும், கேட்-டும் அன்பாக பேசினார்கள். அப்போது கிரைக் ஸிப்பர் (10) என்ற பள்ளி மாணவர் அருகில் கேட் வந்தார்.

இருவரையும் பார்க்க மூன்று மணி நேரமாக கிரைக் நின்றிருந்ததால் சோர்வாக காணப்பட்டான்.

இதோடு அவனுக்கு உடல் நிலை சரியில்லாமலும் இருந்துள்ளது, இதை சரியாக கவனித்த கேட், அவனருகில் சென்று குனிந்து நலமாக இருக்கிறாயா என கேட்டார்.

பின்னர் தனது பாதுகாவலர்கள் அருகில் சென்ற கேட் அவர்களிமிருந்த பையை வாங்கி கொண்டு கிரைக்கிடம் கொடுத்து விட்டு சென்றார்.

வாந்தி வந்தால் அதில் எடுப்பதற்கு குறித்த பை உபயோகப்படும், அதே போல வில்லியம் அருகில் இருந்த சிறுமி தனக்கு சொக்லேட் வேண்டும் என்று அழுத நிலையில் அவருக்கு அதை வாங்கி தர வில்லியம் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கேட்-டின் செயல் குறித்து கிரைக்கின் ஆசிரியர் கூறுகையில், அன்பான தாயின் அக்கறை கொண்ட முகத்தை கேட்-டிடம் பார்க்க முடிந்தது.

சிறுவனிடம் மிகவும் பாசமாக அவர் நடந்து கொண்டார், தற்போது கிரைக்கின் உடல் நிலை நன்றாக உள்ளது என கூறியுள்ளார்.

கேட்-டின் மனிதநேய செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்