Brexit முடிவில் மாற்றம்: பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய யூனியன் கோரிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் முடிவை பிரித்தானியா மாற்றி கொள்ள வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் டொனால்டு ட்ஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எம்.பி-க்கள் மாநாட்டில் தான் டொனால்டு இதை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், யூனியனிலிருந்து விலகும் முடிவை பிரித்தானியா கைவிடாவிட்டால் அடுத்தாண்டு Brexit நடைமுறைக்கு வந்துவிடும்.

அதனை தொடர்ந்து மோசமான பின்விளைவுகள் நடைமுறைக்கு வரும். ஐரோப்பிய கண்டத்தை பொருத்தவரை நாங்கள் எங்கள் மனதை மாற்றி கொள்ளவில்லை, பிரித்தானியாவுக்காக எங்கள் இதயம் எப்போதும் திறந்தே உள்ளது என கூறியுள்ளார்.

நாற்பதாண்டு காலமாக ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றிருந்த பிரித்தானியா அந்த அமைப்பிலிருந்து விலக தீர்மானித்து அதை செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்