லண்டனில் பொலிஸ் அதிகாரி போல நடித்து பெண்ணிடம் £24,000 அபேஸ்: சிசிடிவி-யில் சிக்கிய காட்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் பொலிஸ் அதிகாரிகள் போல போலியாக பேசி மூதாட்டியிடம் £24,000 பணத்தை வாங்கி சென்ற இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

71 வயதான பெண்ணுக்கு கடந்த மாதம் 6-ஆம் திகதி ஒருவர் போன் செய்துள்ளார். தான் ஒரு பொலிஸ் அதிகாரி என கூறிய நபர் ரகசிய வழக்கு ஒன்றை விசாரித்து வருவதாகவும் அதற்கு நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் எனவும் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபருக்கு முதலில் £5,000 பணத்தை பெண் கொடுத்த நிலையில், சில நாட்கள் கழித்து இன்னொரு நபரிடம் £7,000 பணம் கொடுத்துள்ளார்.

பின்னர் இன்னொரு சமயத்தில் கொஞ்சம் பணம் என மொத்தமாக £24,000 பணத்தை இருவருக்கும் கொடுத்துள்ளார்.

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டது மூதாட்டிக்கு தெரியவந்தது. இந்நிலையில் இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இருவரில் ஒருவர் 20 வயதுகளில் உள்ள ஆசியாவை சேர்ந்தவர் என்பதும் அவரின் உயரம் 5 அடி எட்டு அங்குலம் என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி மைக்கேல் எசான்பிடோ கூறுகையில், இது வயதான பெண்ணின் மீது நடத்தப்பட்ட ஒரு இதயமற்ற செயலாகும்.

குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் இதே போன்ற கைவரிசையை வயதானவர்களிடம் மீண்டும் காட்டுவார்கள்.

அவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் எங்களிடம் உடனடியாக தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்