கொடூர பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 10 வயது சிறுவன்: பொலிசில் சிக்கிய பெற்றோர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெற்றோரால் கொடூர பாலியல் துன்புறத்துக்கு 10 வயது சிறுவன் இரையான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவனை சொந்த தாயாரே வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது வெறுக்கத்தக்கதும் அருவருப்பான செயல் என்று Swansea Crown நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிறுவனுடன் உறவு கொண்டதை காணோளியாகவும் பதிவு செய்துள்ளனர். மட்டுமின்றி நிர்வாண நிலையில் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சிறுவனின் பெற்றோரை கைது செய்துள்ள பொலிசார் பல்வேறு பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுவன் தமக்கு ஏற்பட்டதை தெரிவிக்க மறுத்துள்ளதாகவும்,

பின்னர் சில வாரங்கள் உளவியல் ரீதியான சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னரே சிறுவன் தமக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிசாரிடம் விளக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெற இருப்பதாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவருக்கும் பல ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்