லண்டன் தூதரகத்தை வேர்கடலைக்காக விற்ற ஓபாமா: என்னால் முடியாது என டிரம்ப் அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா
335Shares
335Shares
ibctamil.com

லண்டனில் இருந்த அமெரிக்க தூதகரத்தை வேர்க்கடலை விலைக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா விற்றுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள மேபேர் மாவட்டம், குராஸ்வெனார் சதுக்கத்தில் இயங்கிவந்த அமெரிக்க தூதரகத்துக்கு பதிலாக தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு கரைப்பகுதியில் புதிய தூதரகம் ஒன்றை 100 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்க கடந்த 2008-ஆம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சிக்காலத்தில் தீர்மானிக்கப்பட்டது.

லண்டனில் மிக அதிக விலைமதிப்புள்ள பகுதியில் உள்ள தூதரக நிலம் உள்ளிட்ட அமெரிக்க அரசுக்கு சொந்தமான சில சொத்துகளை விற்று புதிய தூதரக கட்டிடத்தை உருவாக்க, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒபாமா நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். இதனால் பிரித்தானியாவில் புதிதாக உருவாகியுள்ள அமெரிக்க தூதரகத்தை டிரம்ப் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதியாக பதவியெற்ற டிரம்ப் இஸ்லாமிய நாடுகள் மீது கடுமையான தடை விதித்ததால், அவர் வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், டிரம்ப் வருவாரா? மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேம்ஸ் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத்தை டிரம்ப் திறந்து வைப்பார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஜனாதிபதி டிரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஒன்றும் ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் தீவிர விசிறி அல்ல. லண்டன் நகரின் சிறப்புமிக்க பகுதியில் இருந்த தூதரகத்தை வேர்க்கடலை விலைக்கு விற்ற ஒபாமா அரசால் 120 பில்லியன் டாலர் செலவில் தொலைதூரத்தில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை ரிப்பன் வெட்டி நான் திறந்து வைப்பதா? என்னால் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்