ஹரியின் காதலி மெர்க்கல் தனது ஆடைக்கு செலவு செய்த தொகையை தனது தந்தைக்கு செய்வாரா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
338Shares
338Shares
ibctamil.com

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தனது நிச்சயதார்த்த ஆடைக்கு செலவு செய்த தொகையை, தனது தந்தைக்கு செலவு செய்வாரா என மெர்க்கலின் சகோதரி சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும்- நடிகை மேகன் மெர்க்கலுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் மே மாதம் 18 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது, நிச்சயதார்த்தத்தின் போது மேகன் மெர்க்கல் கருப்பு நிறத்திலான ப்ராக் அணிந்திருந்தார். அதன் விலை $75,000 ஆகும்.

இந்நிலையில், மெர்க்கலின் சகோதரி சமந்தா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எங்களது தந்தை தாமஸ்க்கு 72 வயதாகிறது. அவர் மருத்துவராக பணியாற்றுகிறார். மெர்க்கல் தனது ஆடைக்கு செலவு செய்த தொகையை, தனது தந்தைக்கு கொடுத்து உதவி செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகன் மெர்க்கல் அரசகுடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்து புகழ்ந்து பேசிய ஹரி, அவர் எங்கள் குடும்பம் போல் எங்கும் வாழ்ந்திருக்கமாட்டார் என கூறியதற்கு சமந்தா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்