பிரித்தானியாவில் இந்தியாவை சேர்ந்த 2 எம்பி-களுக்கு துணை அமைச்சர் பதவி

Report Print Raju Raju in பிரித்தானியா
46Shares
46Shares
ibctamil.com

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ள நிலையில் இந்தியாவை சேர்ந்த 2 எம்பி-களுக்கு துணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த இருவரில் ஒருவர் பெயர் ரிஷி சுனக் (37), இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார்.

ரிச்மாண்ட் தொகுதி எம்.பி-யான இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டு உள்ளது.

இன்னொரு இந்தியரான சுயல்லா பெர்னாண்டஸ் (37) கோவாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.

பார்ஹாம் தொகுதி எம்.பி-யான இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக நடந்த பொதுவாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்