பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஆபாச படம் பார்க்க முயற்சி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாக Wifi இணைப்பின் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிக முறை ஆபாச இணையதளங்களை திறக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என Britain's Press Association தெரிவித்துள்ளது.

இந்த தகவலானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வைபை இணைப்பினை அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் 24,473 முறை ஆபாச இணையதளங்களை திறக்க முயற்சித்தவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த 'வைஃபை' மூலம் ஆபாச இணையதளங்களை பார்க்க முயற்சிப்பவர்களின் 160 முயற்சிகள் நாள்தோறும் முடியடிக்கப்படுவதாக தகவல் அறியும் சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில், 113,208 முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆபாச வலைத்தளங்களும் பாராளுமன்றத்தின் கணினி நெட்வொர்க்கால் தடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற விருந்தினர் Wi-Fi இல் உள்நுழையும் போது தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதையும் இது உள்ளடக்கியுள்ளது என நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்