பிரித்தானியாவில் வேகமாக பரவும் Aussie flu: மேலும் ஒருவர் பலி

Report Print Santhan in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் இருந்து பரவிய Aussie flu தற்போது பிரித்தானியாவில் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் Aussie flu வேகமாக பரவி வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த நோயின் தாக்குதல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக Dorchester, Brecon Beacons, Telford, Dartford மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த நோயின் தாக்கம் இல்லை எனவும் மற்ற பகுதிகளில் வேகமாக பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த காய்ச்சல் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தது எனவும், கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் மோசமாக பரவிய காய்ச்சல் என்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் கிறிஸ்துமஸ் தினக் காலக்கட்டங்களில் இருந்து சுமார் 1,649 இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அயர்லாந்தில் ஒருவர் இதனால் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

48 சதவீத காய்ச்சலின் பாதிப்பால் 112 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 1968-ஆம் ஆண்டு ஹாங்காங் காய்ச்சல் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் இறந்தனர். இதனால் மருத்துவர்கள் தற்போது இந்த காய்ச்சலால் மக்கள் இறக்கலாம் என்று எண்ணி பயப்படுவதாகவும், இந்த காய்ச்சல் காரணமாக 55,000 ஆப்ரேசன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்