பிரித்தானியா தங்களது மின்சார தேவைகளுக்காக, கடந்த 150 ஆண்டுகளாக நிலக்கரி ஆற்றலையே பயன்படுத்தி வந்தது.
ஆனால் இந்த ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளது.
கார்பன் வெளியேற்றத்தை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பிரித்தானியா சரிபாதியாக குறைத்துள்ளது.
இதன்மூலமாக உலகளவில் மக்களுக்கு தூய்மையான ஆற்றலை விநியோகிக்கும் நாடுகளில், பிரித்தானியா ஏழாவது இடம் பிடித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது இடத்தில் உள்ளது.
2017ம் ஆண்டில்,
- மார்ச் மாதத்தில் 19.2GW அளவிலான புதுப்பிக்கதக்க மின்சார ஆற்றலை உற்பத்தி செய்தது.
- 150 ஆண்டுகளில் முதன்முறையாக நிலக்கரி அல்லாமல் உற்பத்தி செய்த மின்சாரத்தின் மூலம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் முழுவதும் பிரித்தானியா இயங்கியது.
- ஜூன் மாதத்தில் நிலக்கரியை பயன்படுத்தாமல் காற்று, அணு மற்றும் சூரிய ஒளியை மட்டும் இணைத்து அதிகளவில் எரிவாயுவையும் உற்பத்தி செய்தது.
- டிசம்பர் மாதம் பிரித்தானியாவில் காற்றை மட்டுமே கொண்டு ஒரே நாளில் 281.5GW என்ற அளவில் மின்சார ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ‘மைகிரிட்-ஜிபி’ என்னும் அமைப்பு கூறுகையில், 2017ஆம் ஆண்டின் 90 சதவித நாட்களில் நிலக்கரியை விட, புதுப்பிக்கதக்க ஆற்றல் அதிக மின்சாரத்தை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இந்த ஆண்டில் காற்றாலை மின்சாரம்தான் அந்நாட்டு மக்களுக்கு 75 சதவித ஆற்றலை வழங்கியுள்ளது.
அதே நேரம் பிரித்தானியா தனது ஆற்றல் தேவைக்காக எரிவாயுவை சார்ந்து இருப்பதையும், அதன் பயன்பாட்டையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அமைப்பைச் சார்ந்த ஆண்ட்ரூ கூறுகையில், ‘பிரித்தானியா, தன் நிலக்கரி தேவையை குறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இப்போது, 7 சதவித மின்சாரம் மட்டுமே நிலக்கரியை கொண்டு தயாரிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.