சாலையில் நிர்வாணமாக பைக் ஓட்டி சென்ற பெண்ணுக்கு சிறை

Report Print Raju Raju in பிரித்தானியா
515Shares

பிரித்தானியா சாலையில் பெண்ணொருவர் நிர்வாணமாக பைக் ஓட்டி சென்று குருடர் மற்றும் பொலிசாரை தாக்கியதால் 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சர்ரே கவுண்டியில் உள்ள வோக்கிங் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

நடாஷா கிளவுஸ் (36) என்ற பெண் அங்குள்ள கோல்ட்ஸ்வர்த் சாலையில் கடந்த யூலை 29-ஆம் திகதி நிர்வாணமாக பைக் ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த நபர் ஒருவருடன் சாலையிலேயே பாலியல் ரீதியான செயலில் ஈடுபட்டதுடன், கண் தெரியாத ஒருவரை அடித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் நடாஷவை கைது செய்தார்கள்.

அப்போது இரண்டு பொலிசாரை நடாஷா தாக்கியுள்ளார், இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது தான் நடாஷா போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என தெரியவந்தது, ஆண்களை நண்பர்களாக்கி இதுபோன்ற தவறான செயலில் நடாஷா அடிக்கடி ஈடுபட்டதும் உறுதியானது.

இதையடுத்து பொலிசாரையும், குருடரையும் தாக்கியது, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது உட்பட பல்வேறு தவறுகள் செய்த நடாஷாவுக்கு 13 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதோடு வோக்கிங் நகருக்குள் நடாஷா நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்