லண்டனில் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இளம் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனின் Canary Wharf பகுதியில் இருக்கும் Marsh Wall-லில் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வந்த மர்ம நபர் அப்பெண்ணின் மீது ஆசிட் வீசியதால், அப்பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்து பொலிசார் குறித்த பகுதிக்கு வருவதற்குள் அந்த நபர் தப்பிவிட்டதாகவும், பாதிப்புக்குள்ளான நபருக்கு முகம் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆசிட் வீசிய நபரை பாதிப்புக்குள்ளான பெண் பார்க்காததாலும், அந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினாலும் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அவனை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர்..

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்