இளவரசர் ஹரிக்கு எதிர்ப்பு தெரிவித்த மெர்க்கல் சகோதரி: ஏன்?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி, எலிசபெத் மகாராணி உட்பட அரச குடும்பத்தினருடன்ஹரியின் வருங்கால மனைவி மேகன் மெர்க்கல் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

இது குறித்து ரேடியோ 4 என்ற வானொலி நிகழ்ச்சியில் இளவரசர் ஹரியிடம் கேள்வியெப்பப்பட்டது.

அவர் கூறுகையில், மகாராணி மற்றும் அரச குடும்பத்துடன் மேகன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார்.

அவர் எங்களுடன் இருந்ததை எங்கள் குடும்பத்தினர் மிகவும் விரும்பினார்கள். அரச குடும்பம் போல ஒரு குடும்பத்துடன் அவர் இதுவரை வாழ்ந்திருக்க மாட்டார் என கூறினார்.

ஹரியின் இந்த கருத்துக்கு மேகனின் ஒன்று விட்ட சகோதரி சமந்தா மெர்க்கல் எதிர்ப்பு தெரிவித்து அவரின் கருத்தை மறுத்துள்ளார்.

இது குறித்து சமந்தா டுவிட்டரில், மேகன் பெரிய குடும்பத்தில் வளர்ந்தவர் தான், நாங்கள் எப்போதும் அவருடன் இருந்துள்ளோம்.

நாங்கள் யாரும் பிரிந்ததேயில்லை, மேகன் பிசியாக இருந்தார் என்பதே நிதர்சனம்.

மேகன், ஹரியை திருமணம் செய்த பின்னர் மேகனின் குடும்பம் இன்னும் பெரிதாகும், அவ்வளவு தான்.

எங்கள் குடும்பத்தில் சகோதரர்கள், சகோதரிகள், அத்தை, மாமா, அற்புதமான தந்தை என எல்லோரும் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேகன் தந்தை தாமஸின் முதல் மனைவியின் மகள் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்