புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அழகு தேவதை! பெற்றோரின் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அரியவகை மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவளின் பெற்றோரின் தீவிர முயற்சியால் உடல்நலம் தேறி வருகிறாள்.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்காட் என்பவரின் 7 வயது மகள் கேலி லாவ், அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இச்சிறுமியை குணப்படுத்த இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்ட முயற்சியினால் தற்போது அவள் உடல்நலம் தேறியிருக்கிறாள்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ஸ்காட் கூறுகையில், எங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நோயினால் அவள் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறினர், இருப்பினும் அதனை எங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வசதி வாய்ப்பு இல்லை என்றாலும் எப்படியாவது அவளை காப்பற்ற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஏனெனில் கேலி லாவ் எங்களை அந்த அளவுக்கு நம்பினாள்.

இதனைத் தொடர்ந்து மெக்சிகோ நாட்டிற்கு சென்று அவளுக்கு மாற்று மருத்துவம் அளிக்க முடிவு செய்தோம். லாவ்வின் உடல்நிலைக்கு அவள் விமான பயணம் மேற்கொள்ளக் கூடாது. எனினும், மன தைரியத்துடன் நாங்கள் அவளை அழைத்துச் சென்றோம்.

அங்கு சென்று மாற்று மருத்துவத்தில் சிகிச்சை அளித்தோம், படிப்படியாக நோய் கட்டுக்குள் வந்தது. தொடர் சிகிச்சையின் காரணமாக, லாவ் ஒரே வாரத்தில் எழுந்து நடந்தாள், 3 மாத சிகிச்சைக்கு பிறகு பிரித்தானியாவுக்கு வந்து விட்டோம்.

2018ஆம் ஆண்டு வரை, அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும், இதற்காக நன்கொடை திரட்டி வருகிறோம்.

தற்போது பிரித்தானியாவில், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பவள் கேலிதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

என் மகள் குணமடைந்து விடுவாள் என்ற நம்பிக்கை, எங்களைப் போல் எல்லோருக்கும் தற்போது வந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்