தாக்குதலில் மகளை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட வீர தாய்

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் கத்தி குத்து தாக்குதலின் போது மகளின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பெல்பெஸ்ட் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கத்தியை வைத்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஜைனி டோல் (43) என்ற பெண்ணுக்கு அதிகளவு கத்தி குத்து ஏற்பட்டது, அவரின் மகள் சரோலேட் ரியி (21)க்கும் தலை மற்றும் கழுத்து பகுதியில் அடிப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர், சரோலேட்டை நோக்கி மர்ம நபர்கள் கத்தியால் குத்த சென்ற போது அதை டோல் தடுக்க முயன்றதில் அவருக்கு அதிக காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக டோல் பரிதாபமாக உயிரிழந்தார், மீதமுள்ள அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து அவரின் மகள் சரோலேட் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், என் கண் முன்னால் என் கைகளில் அம்மா உயிரிழந்ததை என்னால் மறக்கவே முடியாது.

பயம் மற்றும் வலியால் அவர் கத்தியது என் காதுகளில் இன்னும் விழுகிறது, என்னை அவர் தான் காப்பற்றினார், உங்கள் இறப்புக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியில் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற விபரம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்