பிரித்தானிய இளவரசர் பேட்டியில் ஒபாமா கூறியது யாரை?

Report Print Kabilan in பிரித்தானியா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் சமூகவலைதளங்களை கவனமாக கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிபிசி குழுமத்திற்கு சொந்தமான பிபிசி ரேடியோ 4-க்காக, பிரித்தானிய இளவரசர் ஹரி முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பேட்டி எடுத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பொறுப்பற்ற முறையில் கையாள கூடாது, அது ஒரு விடயம் தொடர்பான பல்வேறு யதார்த்த மனநிலையில் உள்ள மக்களை தவறான தகவல்களை நோக்கி திசை திருப்பிவிடும்.

ஏனெனில் இது இணைய யுகம், எனவே பல தரப்பினரின் கண்ணோட்டங்களையும், குரல்களையும் அனுமதித்து, பொதுவான கருத்துருவாக்கத்துக்கு இந்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் ஒபாமா இவ்வாறு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்