மாயமான மகள்: வைரலாகும் தாயின் உருக்கமான பதிவு

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 21 வயதான இளம்பெண் திடீரென மாயமான நிலையில் அவரது தாயாரின் பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி Lynn, இவரின் 21 வயது மகள் சோபியா, நேற்று அதிகாலை 3 மணியளவில் காணாமல் போயியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த Lynn பொலிசில் புகார் அளித்தார். எனினும் இதுவரை அப்பெண் கிடைக்காததால், பேஸ்புக் பக்கத்தில் சோபியாவிற்கு தகவல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதில், சோபியா ஸ்மித், நீ தான் என் உலகம். உன்னை பாதுகாக்க நான் ஏன் தவறினேன் என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னிடம் வந்துவிடு என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த சோபியாவின் நண்பர் ஒருவர், சமூக வலைதளத்தில், ‘சோபியா ஸ்மித் என்ற பெண், அதிகாலை மூன்று மணியளவில் Gorleston நகரில் உள்ள Avondale road/bells road பகுதியில் காணாமல் போயுள்ளார்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உள்ள குறித்த பெண், Leggings உடை அணிந்திருந்தார். இவரை கண்டால் உடனடியாக அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் ஒருவேளை வணிகராக இருந்தால், உங்கள் பகுதியில் உள்ள CCTV காமிராக்களில் பதிவான காட்சிகளை, உடனடியாக ஆய்வு செய்து தகவல் தெரிவித்து உதவுங்கள்.

ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளைக் கொண்டு வெளியில் தேடுவதில் ஒரு பயனும் இல்லை. எனவே, உங்களின் தகவல் தான் உதவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், காணாமல் போன 21 வயது இளம் பெண்ணை தேடும் பணியில், கடற்படையுடன் காவல்துறை அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.

கடந்த 9 மணிநேரமாக ஹெலிகாப்டரின் உதவியுடன் தேடி வருகிறோம். இனியும் தேடும் பணி தொடரும்.

எவருக்கேனும் அப்பெண் குறித்த தகவல் தெரிந்தால், உள்ளூர் பொலிசாரை உடனடி தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்