தனியாக தவித்த 60 பேருக்கு விருந்து வைத்த பெண்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

ஸ்காட்லந்தில் வாழும் பெண்ணொருவர் அகதிகள், வீடில்லாதவர்கள், வயதானவர்கள் என 60 பேரை அழைத்து கிறிஸ்துமஸ் விருந்து அளித்துள்ளார்.

நாட்டின் கிரினோக் நகரை சேர்ந்தவர் டெயிலர் பர்னிஸ் (20) இவர் தனது மகள் ஹர்பருடன் (1) வசித்து வருகிறார்.

இந்நிலையில் பர்னிஸ் பேருந்தில் சென்ற போது அவருடன் பயணித்த பெண், கிறிஸ்துமஸ் பண்டியை கொண்டாட தனக்கு யாருமே இல்லை என வருத்தப்பட்டுள்ளார்.

பர்னிஸ்கும் குழந்தையை தவிர யாருமில்லாத நிலையில் தன்னை போல தனியாக தவிப்பவர்களோடு பண்டிகையை கொண்டாட முடிவெடுத்தார்.

அதன்படி இணையத்தில் இது குறித்து பதிவிட்டார். இதை பார்த்த 134 ஹொட்டல்களுக்கு சொந்தகாரரான தாமஸ் காம்ஸ்டன் என்ற நபர் தனது ஹொட்டலிலேயே பர்னிஸ் அழைத்து வரும் நபர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்தார்.

இதோடு பலரும் பர்னிஸுக்கு பண உதவி செய்தார்கள்.

இதையடுத்து கிறிஸ்துமஸ் தினத்தன்று அகதிகள், வீடில்லாதவர்கள், வயதானவர்கள், பிள்ளையுடன் தனியாக வாழும் பெண்கள் என 60 பேருக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

விருந்துக்கு தாமஸும், பர்னிஸும் சேர்ந்து சமைத்தார்கள். விருந்துக்கு பின்னர் தான் வாங்கி வைத்திருந்த பரிசு பொருட்களை வந்தவர்களுக்கு பர்னிஸ் கொடுத்தார்.


பர்னிஸ் கூறுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்த எனக்கு நான்கு வாரங்கள் ஆனது, £600 வரை கிடைத்த நிதியுதவியில் பலருக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தேன்.

என்னிடம் இருந்த பணத்தையும் போட்டு குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி கொடுத்தேன், எனக்கு உதவியவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்