அபாயகரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது: பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் அபாயகரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக பனிப்பொழிவின் காரணமாக உறைபனி ஏற்பட்டு விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது, வடக்கு மற்றும் மேற்கத்திய தீவுகள், Highlands மற்றும் Grampian ஆகிய பகுதிகளில் நாளை அதிக பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Strathclyde, Lothian மற்றும் South West Scotland ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவுடன் கூடிய மழை பெய்யும். Bristol - இல் உள்ள M5 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது, ஏனெனில் லொறிகளால் மேல்நோக்கி வர இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பதால் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என வெள்ளம் தகவல் சேவை மையம் 14 முறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ள அபாய பாதுகாப்பு கருவிகளும் தயா நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பனி மற்றும் பனிக்கட்டியால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் விமான பயணிகள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14,000 நெட்வொர்க்குள் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சார தடை ஏற்படும் என்றும் தற்போது ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சார வசமி இல்லை Western Power Networks தெரிவித்துள்ளது.

பர்மிங்ஹாமில் தற்போது அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு தாக்கியதால் வெப்பநிலைகள் மைனஸ் 8 டிகிரி C க்கு கீழ் குறையும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்