பிரித்தானியாவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட இந்தியருக்கு சிறை தண்டனை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் சேர்ந்து இயங்கிய இந்தியருக்கு 20 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தல்ஜீத் சிங் ஜுட்லா (42) என்பவர் லண்டனில் தங்கி வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2014 அக்டோபரிலிருந்து 2016 ஜனவரி காலகட்டத்துக்குள் 10 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து போதை மருந்துகள் மற்றும் பண மோசடியில் தல்ஜீத் ஈடுபட்டுள்ளார்.

வேனில் ஒரு சமயம் போதை மருந்துகள் விற்ற £90,000 பணத்தை எடுத்து சென்ற போது பொலிசாரிடம் தல்ஜீத் சிக்கினார்.

ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு தான் இந்த கும்பல் அதிகளவு போதை மருந்துகளை சப்ளை செய்துள்ளது.

கும்பலின் தலைவர் ஜேமி ஹுஜஸ் உட்பட பத்து பேருக்கு மொத்த 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் தல்ஜீத்துக்கு 20 மாதங்கள் சிறை தண்டனையும், இரண்டாண்டுகள் நன்னடத்தை சோதனை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு சம்பளம் இல்லாமல் 200 மணி நேரம் வேலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்