ஸ்காட்லாந்தில் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் பச்சியம் குழந்தை காப்பாற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சோல் டோமண்ட் பகுதியின் கேமரான் ஹவுஸ் ஹோட்டலில் திடீரென தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபலங்களின் திருமணங்கள், சினிமா நட்டசத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வந்து செல்லும் 5 நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் பற்றிய தீ கடுமையான போராட்டத்துக்கு பின்னர் அணைக்கப்பட்டுள்ளது.
தீ பற்றியிருப்பதை கண்டவுடன் ஹோட்டல் நிர்வாகம் சார்பாக முதலில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த 200-க்கும் அதிகமான விருந்தினர்கள் அருகில் உள்ள மற்றொரு ஹோட்டலுக்கு மீட்பு படையினரின் உதவியோடு மாற்றப்பட்டனர்.
அப்போது ஒரு நபர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் காயாங்களுடன் மற்றொரு நபர் அருகில் இருந்த ராயல் அலெக்சாண்ட்ரா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் பலியாகியுள்ளார்.
இரண்டு நபர்கள் பலியான இந்த சம்பவத்தின் போது ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியர் மற்றும் அவர்களது பெண் குழந்தை பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் ஜிம்மி என்ற அந்த குழந்தையை மீட்புபடையினர் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் போராடி மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் Nicola Sturgeon தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மிகுந்த துயரத்திற்கு ஆளானேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆதரவை தெரிவித்துகொள்கிறேன். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு படையினர் மற்றும் குறிப்பாக குழந்தையை பத்திரமாக மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து சில அரசியல் கட்சியினர், பிரபலங்கள் என பலரும் மீட்பு படையினருக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.