பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கான பிரித்தானிய பிரதமருடைய முக்கிய அறிவித்தல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயம்.

அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றை பிரித்தானிய அரசாங்கமும் ஐரோப்பிய ஆணைக்குழுவும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தது.

இதன் பின்னணியில் பிரித்தானியப் பிரதமர் திரேசா மே அவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையை 11.12.2017 அன்று வெளியிட்டுள்ளார்.

அதில் பல விடயங்களை பிரித்தானியவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய மக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Jay Visva Solicitorsக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்ட அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியில் வரும் பொழுது உங்களுடைய அனைத்து உரிமைகளும் யுகே சட்டங்களாக எழுதப்பட்டிருக்கும்.

உங்களுடைய உரிமைகள் யுகே நீதிமன்றங்களால் அமுல்படுத்தப்படும். பொருத்தமான இடங்களில், எங்களுடைய நீதிமன்றங்கள் சம்பத்தப்பட்ட European Court of Justice(ECJ) வழக்குச் சட்டங்களை (Case Law) கருத்திற்கொள்ளும்.

தற்பொழுதுள்ள வழக்குச் சட்டங்கள் தெளிவில்லாத சந்தர்ப்பங்களில், எங்களுடைய நீதிமன்றங்கள் தங்களுடைய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ECJஐ இந்தசட்டங்கள் தொடர்பான பொருள்விளக்கம் கோரிதொடர்பு கொள்வதற்கு 8 வருடங்கள் வரைக்கும் உடன்பட்டுள்ளோம்.

நாங்கள் 29 மார்ச் 2019 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுவெளியில் வரும்பொழுது, தொடர்ச்சியாக 5 வருடங்கள் யுகேயில் வசித்திருந்தால், நீங்கள் Settled Status பெறுவதற்கு தகுதியானவர்களாக இருப்பீர்கள்.

அத்துடன் ஐந்து வருடங்களுக்கு குறைவாக இருந்திருந்தால் நீங்கள் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்யும் வரைக்கும் இங்கு தங்கக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் பேச்சுவார்த்தையில் உடன்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் Settled Status உடன் உங்களுடைய நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் யுகே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற பின்னரும் உங்களுடன் யுகேயில் இணையலாம்.

உங்களுடைய மருத்துவ சுகாதார உரிமைகள், ஓய்வூதிய உரிமைகள் மற்றும் மற்றைய சலுகைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் தற்பொழுது உள்ளது போன்றே இருக்கும்.

அடுத்த வருட நடுப்பகுதிக்கு அப்பாலிருந்து தெளிவான இலகுவாக நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை நீங்கள் Settled Status க்கு விண்ணப்பிக்ககூடிய வகையில் நடைமுறையிலிருக்கும்.

நீங்கள் ஏற்கனவே தகுதியான நிரந்தரவதிவுரிமை ஆவணத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் இலவசமாகவே உங்களுடைய நிரந்தரவதிவுரிமையை Settled Status ஆகமாற்றிக்கொள்ளலாம் என மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி வெளியிட்ட இந்த பத்திரிகை அறிக்கையின் முழு ஆங்கில வடிவத்தையும் நீங்கள் இந்த இணைப்பை அழுத்திப் பார்வையிடலாம்.

மேலதிக தகவல்களுக்கு

தகவல் Jay Visva Solicitors

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்