பிரித்தானிய நகை கடையில் பாரிய கொள்ளை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரபல நகை கடை ஒன்றில் 250,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான நகைகளை ஆயுதங்களுடன் வந்து கொள்ளையிட்டுத் தப்பிய கும்பலுக்கு நீதிமன்றம் கடும் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல நகை கடையில்தான் இந்த பாரிய கொள்ளை நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி நடந்த இந்த விவகாரம் தொடர்பில் கண்காணிப்பு கமெராக்களை ஆய்வுக்கு உட்படுத்திய விசாரணை அதிகாரிகள், அதில் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த கும்பல் நகை கடை விற்பனையாளரை புகையை காட்டி ஏமாற்றி திசை திருப்புவதையும், சுத்தியலால் விற்பனையாளரை தாக்க முயற்சிப்பதும் அதில் பதிவாகியிருந்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசாரிடம் ஒரே ஒரு நபர் மட்டுமே சிக்கியுள்ள நிலையில், தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைதாகினர்.

கொள்ளை கும்பலில் Owen Richardson சுத்தியலால் தாக்க முயற்சிக்க அவருடன் வந்த Daijon Johnson மற்றும் Jamul Pinnock-Parkes ஆகியோர் 250,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.

இதில் நகை கடைக்குள் நுழையாமல் வெளியே காத்திருந்த 17 வயது நபர் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். Richardson மற்றும் Jermaine Davis ஆகிய இருவரும் சம்வத்தன்றே பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையில் Owen Richardson என்பவருக்கு கொள்ளைக்கு திட்டமிட்ட குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், Johnson என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், Pinnock-Parkes என்பவருக்கு 10 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.

250,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன நிலையில் கொள்ளையர்களிடம் இருந்து சுமார் 12,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான நகைகள் மட்டுமே பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்