பிரித்தானியாவில் 3 குழந்தைகள் தீயில் கருகி பலி: பொலிசில் சிக்கிய இளைஞர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதனுள் சிக்கிய மூன்று குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தாயார் ஒருவரும் 3 வயது சிறுமியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மட்டுமின்றி குறித்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மான்செஸ்டர் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் அண்டைவீட்டில் குடியிருக்கும் இளைஞர் ஒருவருடன் சம்பவ நாள் இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த குறித்த நபர் அதிகாலையில் சிம்னி வழியாக எரிபொருளை ஊற்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் தூக்கத்தில் இருந்த அந்த குடும்பம் சிக்கிக் கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலின்போது சிறுவர்கள் உள்லிட்ட 7 பேர் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில் Demi Pearson(14), Lacie(7), மற்றும் Brandon(8) ஆகிய 3 பேரும் உடல் கருகி பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிறுவர்களின் தாயார் மற்றும் 3 வயது சிறுமி ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கொடூர தாக்குதல் தொடர்பாக 23 வயது இளைஞர் உள்ளிட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மான்செஸ்டர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்