ஐரோப்பிய கூட்டணியில் இருந்து விலக பிரித்தானிய கொடுக்க போகும் இழப்பீடு இத்தனை லட்சம் கோடியா?

Report Print Santhan in பிரித்தானியா
500Shares

ஐரோப்பிய கூட்டணி இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் கோடி இழப்பீடு வழங்க பிரித்தானியா சம்மதம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேற முடிவெடுத்தது. இந்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றார்.

ஆனால், ஓட்டெடுப்பில் அவரது கருத்து தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்வு செய்யப்பட்டார்.

ஐரோப்பிய கூட்டணியில் இருந்து வெளியேற பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் உரிமையை பெறும் வகையில் பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக அவர் பதவியேற்றார்.

அதை தொடர்ந்து பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பணிகள் வேகம் பிடித்தன. ஆனால், ஐரோப்பிய கூட்டணி நாடுகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து பல்வேறு நிபந்தனைகள் விதித்தன.

ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் மாநாடு பிரஸ்செல்ஸ் நகரில் டிசம்பர் 14 மற்றும் 15ல் நடக்கிறது. அந்த நேரத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரித்தானியா பிரதமர் மே முடிவெடுத்தார்.

இதற்காக நேற்று அவர் பிரஸ்செல்ஸ் நகர் வந்தடைந்தார். அதை தொடர்ந்து அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் வருங்காலத்தில் பிரித்தானியா - ஐரோப்பிய கூட்டமைப்பு உறவுமுறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடுமையான எல்லை கோட்பாடுகள் இருக்காது. ஒப்பந்தம் உறுதி செய்யப்படும். பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், முன் வாழ்ந்தது போல தொடர்ந்து வாழலாம்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு சமரச நிலைதான். பேச்சுவார்த்தைகள் கடினமாக இருந்தது. இருப்பினும் முக்கியமான மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

- Dina Karan

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்