இளவரசர் ஹரியை மேகன் மார்கல் திருமணம் செய்யவிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என மேகன் தந்தை தாமஸ் கூறியுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்கிலும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் அடுத்தாண்டு மே மாதம் பிரித்தானியாவின் விண்ட்சர் கேஸ்டிலில் திருமணம் நடக்கவுள்ளது.
இந்நிலையில் மேகன் திருமணம் குறித்து முதல் முறையாக அவரின் தந்தை தாமஸ் (73) பேசியுள்ளார்.
மேகனுக்கு ஐந்து வயதாகும் போதே தனது மனைவியை தாமஸ் விவாகரத்து செய்துள்ளார்.
தற்போது மெக்சிகோவில் உள்ள சிறிய வீட்டில் தனது ஓய்வு காலத்தை தாமஸ் கழித்து வருகிறார்.
தாமஸ் கூறுகையில், மேகனுக்கும், இளவரசர் ஹரிக்கும் அடுத்தாண்டு திருமணம் நடக்கும் போது என் மகளுடன் சேர்ந்து திருமண நிகழ்வு நடைபாதையில் சேர்ந்து நடந்து வர ஆர்வமாக உள்ளேன்.
எனக்கு இவர்களின் திருமண செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மகளின் திருமணம் குறித்த வேறு விவரங்களை தற்போது வெளியிட இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
தனது வருங்கால மாமனார் தாமஸை இளவரசர் ஹரி இதுவரை நேரில் சந்தித்ததில்லை என்பதும் போனில் மட்டும் அவருடன் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.