லண்டனில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்த தந்தை.. மகளும் கொலை

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர் என தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Deptford பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருபவர் Noel Brown(69). இவருக்கு Marie (41) என்ற மகள் உள்ளார். Marie அங்கிருக்கும் Southwark பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களின் உடலை பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இதில் கொலை செய்யப்பட்ட Noel Brown மற்றும் Marie-யின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி Noel Brown துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கிடந்துள்ளார், அவரின் அருகே மகளும் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

Noel Brown கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் குற்றம் காரணமாக நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து வந்துள்ளார். அதன் பின் அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை, Noel Brown வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்னர் இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் குறித்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, ஆனால் தெளிவாக தெரியவில்லை, இதனால் இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers