கரோலின் புயல்: பிரித்தானியாவுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா

கரோலின் புயலால் மணிக்கு 90 மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என பிரித்தானிய வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரித்தானியா வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் பிரித்தானியாவின் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், எல்லாவற்றுக்கும் ஆயுத்தமாக இருக்கும்படி ஆம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மணிக்கு 90 மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும், சில இடங்களில் அதே வேகத்தில் பனிப்பொழிவு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு பகுதியில் காலை ஏழு மணிக்கு 13 செல்சியஸ் டிகிரி இருக்கும் பட்சத்தில் குளிர்ந்த காற்று அதிகரிப்பதன் காரணமாக அது மாலை 3 மணிக்கு 6 செல்சியஸ் டிகிரியாக குறைய வாய்ப்பிருக்கும்.

வடக்கில் ஏற்கனவே குளிர்ந்த காற்று வீச தொடங்கிவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் ஏற்கனவே அதிகரித்துள்ளதன் காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள ரயில் சேவைகளும், படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் படகு சவாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில பாலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

Edinburghலிருந்து Aberdeen, Edinburghலிருந்து Inverurie Aberdeenலிருந்து Inverness போன்ற முக்கிய ரயில் சேவைகள் தற்காலிமாக கரோலின் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் எச்சரிக்கையானது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஸ்காட்லாந்து தெற்கு பகுதி மற்றும் வடக்கு அயர்லாந்தின் வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்று காரணமாக பறக்கும் குப்பைகளால் மனிதர்களுக்கு ஆபத்தான காயம் ஏற்படலாம் எனவும், கூரை கட்டிடங்கள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மைய தலைவர் ஸ்டீவ் கூறுகையில், வலுவான காற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் வடமேற்கு பகுதிக்கு வந்து, வடகிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வட தீவுகளுக்கு சென்று பிற்பகல் வரை நீடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers