பிரித்தானிய இளவரசரை இந்த இடத்தில் வைத்து தாக்க திட்டம்: வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜை அவர் படிக்கும் பள்ளியில் வைத்து தாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரவிருந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Lancashire- ஐ சேர்ந்த 31 வயதுடைய நபர் Husnain Rashid என்பவல் தீவிரவாதிகளுக்கு உதவியதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்குவிசாரணை Westminster Magistrates நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. மேலும், இவர் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்கும் முயற்சித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான இவர், இந்த வருடம் இளவரசர் ஜார்ஜை தாக்குவதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தனக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திடம் இருந்து வந்ததாகவும், அவர் படிக்கும் பள்ளியில் வைத்து அவரை தாக்கவிருக்கின்றனர் என நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஐஎஸ் தீவிரவாதிகள், இளவரசரை தாக்கவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது, தற்போது இந்நபரின் தகவலால் அரசருக்கு பள்ளியில் பாதுகாப்ப வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...