கலாசாரத்தால் கவரப்பட்ட லண்டன் இளைஞர்: நடந்தே தமிழகம் வந்தடைந்தார்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய கலாசாரத்தால் கவரப்பட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டு கலாசாரம் குறித்து ஆவணப்படும் எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஹன்டர் ஸ்மார்ட்(24) கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு நகரங்கள் வழியாக பயணம் செய்து இந்திய மக்களின் கலாசாரங்கள், பண்பாடு, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ஆகியவற்றை பதிவு செய்த அவர், நேற்று தமிழகத்தின் திருநெல்வேலிக்கு வந்தடைந்துள்ளார்.

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றையும், சுலோச்சனா முதலியார் பாலத்தையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள அன்புச் சுவர் உள்ளிட்டவற்றை அவர் வீடியோ பதிவு செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய மக்கள் குறு நிலங்களிலும் விவசாயம் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வது ஆச்சரியமாக உள்ளது, எனது பயணத்தில் நான் பதிவு செய்த காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடவும், இது தொடர்பாக விரிவான நாவல் எழுதவும் திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்