பிரதமர் தெரசா மே-வை கொலை செய்ய திட்டம் தீட்டிய மர்ம நபர்: பொலிசார் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரதமர் தெரசா மே-வை கொலை செய்ய திட்டமிடப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் London மற்றும் Birmingham பகுதியில் கடந்த வாரம் 28-ஆம் திகதி பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்குரிய அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவனின் பெயர் Naa’imur Zakariyah Rahman எனவும் மற்றொருவனின் பெயர் Mohammed Aqib Imran எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், இவர்கள் இரண்டு பேரும் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அதில் Mohammed Aqib Imran-விடம் சோதனை மேற்கொண்ட போது அவனிடம் பையில் குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு குண்டு வெடிக்க பயன்படுத்தப்படும் IEDs சாதனமும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த குண்டை அவன் Downing Street-ல் இருக்கும் கேட்டின் 10-ன் உள்ளே நுழைந்து குண்டு மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தி மூலம் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட Mohammed Aqib Imran லிபியாவைச் சேர்ந்தவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இன்று Westminster-ல் இருக்கும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

ஆனால் ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் இந்த சதித்திட்டத்தை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்