பிரித்தானியாவில் உள்ள கார்னிஷ் கிராமம் ஒன்றில் பெருந்தொகைக்கு இல்லம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதை கும்பலொன்று விபச்சார விடுதியாக பயன்படுத்தி வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த கும்பலானது பிரபல இணையதளம் வாயிலாக பெருந்தொகைக்கு இல்லம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதை விபச்சார விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
250 பேர் மட்டுமே குடியிருக்கும் இந்த கிராமத்தில் திடீரென்று போதை மருந்து கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதை அடுத்தே பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிசார் தொடர்புடைய குடியிருப்பை சோதனையிட்டனர். அதில் பாலியல் தொழில் செய்து வந்த 2 பெண்கள் பொலிசிடம் சிக்காமல் மாயமாகியுள்ளனர். ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
800,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான குடியிருப்பை இணையம் வாயிலாக வாடகைக்கு விட்ட உரிமையாளருக்கும் இத்தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது என கூறப்படுகிறது.
மேலும் குறித்த குடியிருப்பில் போலந்து மற்றும் ரோமானிய நாட்டவரான பெண்களே பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆபாச வலைதளங்களின் வாயிலாக பதிவு செய்யப்பட்டு குறித்த இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
Devon and Cornwall பொலிசார் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.