லண்டனில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதிய கார்..3 பேர் காயம்: 2 பேர் படுகாயத்துடன் அனுமதி

Report Print Santhan in பிரித்தானியா
345Shares
345Shares
ibctamil.com

லண்டனில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் கார் ஒன்று பயங்கரமாக மோதியதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Stockwell சாலையில் பாதசாரிகள் செல்லும் பாதையில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 3 மணி அளவில் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.

இதில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 பேரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து இல்லை எனவும் 2 பேர் மோசமான காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும், எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட விபத்து எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

மேலும் தற்போது Stockwell சாலை மூடப்பட்டுள்ளதுடன், அப்பகுதி வழியே வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுவதாகவும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்