லண்டன் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஓட்டம்: ஆயுதமேந்திய பொலிசார் குவிப்பு

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டாம் இணைப்பு

லண்டனில் உள்ள இரயில்நிலையத்தில் துப்பாக்கிசூடு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டதால், அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு தற்போதைக்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Oxford Circus இரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக கூறி, பொதுமக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.

இதனால் Oxford தெருவில் பீதி நிலவியது. இது தொடர்பான தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் உடனடியாக இரயில் நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

முதலில் பொலிசார், இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என்று கூறிய அவர்கள், அதன் பின் அங்கு சென்று சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்ட போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததற்கான அறிகுறியும், இல்லை, அப்படி சந்தேகிக்கும் படி நபர் யாரும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் கூட்ட நெரிசலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதாகவும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இங்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது போல் தெரியவில்லை, இருப்பினும் என்ன நடந்தது, என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால், தற்போதைக்கு இங்கு மக்கள் யாரும் வர வேண்டாம் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இரயில் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள, பொலிசார் ஆயுதமேந்திய நிலையில், அப்பகுதியில் உள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்