திருட வந்த வீட்டில் சாப்பிட்டு தூங்கிய திருடன்: பின்னர் நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

கொள்ளையடிக்க வந்த வீட்டில் இருந்த உணவு பண்டங்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே தூங்கிய திருடனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் வடக்கு லனர்க்சிரின் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்னர் திருடன் ஒருவன் கொள்ளையடிக்க வந்துள்ளான்.

வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்த அவன் வீட்டில் இருந்த திண்பண்டங்களை சாப்பிட்டுள்ளான்.

பின்னர், உண்ட மயக்கத்தில் அங்கேயே படுத்து உறங்கியுள்ளான். இதையடுத்து திருடன் வீட்டில் தூங்குவதை பார்த்து அதிர்ந்த வீட்டு உரிமையாளர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் திருடனை கைது செய்தனர். இது குறித்து பொலிசார் தங்கள் டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்