ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வலியுறுத்து

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வலியுறுத்து

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டுமென்று, ஜேர்மனியைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் இது தொடர்பான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஜேர்மனிய தொழிற்றுறைச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் மூவர், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடனும் விவாதித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதன் மூலம், மிக முக்கியமான கூட்டாளி நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் இழக்க நேரிடுமெனவும் வர்த்தகக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்