லண்டனில் தீ விபத்து! தீயணைப்பு வீரர்கள் போராட்டம்- பெண்ணொருவர் பலி

Report Print Vethu Vethu in பிரித்தானியா

லண்டனில் Hampstead பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Hampstead பகுதியில் உள்ள Daleham Gardens அடுக்கு மாடி கட்டட தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது வீடுகளில் சுமார் 20 பேர் இருந்ததாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக லண்டன் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டன் நேரப்படி இன்று அதிகாலை 1.52 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த பகுதியில் வாகனங்கள் பயணிக்க கூடாதென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்