நாட்டின் வளமைக்கு மேலாக அரசியலை புகுத்தாதீர்: ஐரோப்பிய யூனியனுக்கு டேவிட் டேவிஸ் வலியுறுத்தல்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஒரு நாட்டின் வளமைக்கு மேலாக அரசியலை நுழைக்கக்கூடாது என பிரெக்சிற்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரெக்சிற்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது டேவிட் டேவிஸ் கூறுகையில், தற்போதைய நவீன அரசியலில் அனைத்து நாடுகளின் அரசுகளும் கொந்தளிப்பான காலகட்டத்தை சந்தித்து வருகின்றன.

எனினும் காலப்போக்கில் அவை கடந்து போகும், பிற நாடுகளுடன் சரக்கு மற்றும் சேவைத்துறையில் சுதந்திரமான எவ்வித தலையீடும் இல்லாத வர்த்தகம் நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.

ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 176 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து வெளியேறிய பின்பும் அந்த அமைப்புக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார உறவு தொடர வேண்டும்.

நாட்டின் வளமைக்கு மேலாக அரசியலை புகுத்துவது சரியான முடிவாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...