எனது மகன்களின் முன்னிலையில் நான் இறக்கப்போகிறேன்: தாயின் வேதனை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர், பூஞ்சைகளால் சூழப்பட்ட பர்கரை சாப்பிட்ட காரணத்தால் தனது உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனால், தனது நான்கு குழந்தைகளின் கண் எதிரிலேயே தான் இறந்துவிடப்போவதாக கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Shanie Granfield என்பவர் தனது 7 மாத குழந்தையுடன் பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் South African Mcdonalds stack கடைக்கு சென்று பர்கர் ஆர்டன் செய்துள்ளார்.

இவரது ஒரு கையில் குழந்தை இருந்த காரணத்தால், மற்றொரு கையால் பர்கரை சாப்பிட்டுள்ளார், இதனால் அந்த பர்கரில் பூஞ்சைகள் சூழப்பட்டிருப்பதை இவர் கவனிக்கவில்லை.

இதனை சாப்பிட்ட இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Granfield கூறியதாவது, பர்கரை சாப்பிட்ட 10 நிமிடத்தில், என் உதடுகளிலும், தொண்டைகளிலும் பயங்கர எரிச்சல் ஏற்பட்டது.

எனது தொண்டையெல்லாம் வறண்டு போய் தண்ணீர் தாகம் எடுத்தது. மயங்கி விழுந்த என்னை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது, எனது தொண்டையானது பூஞ்சை தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ECG ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இது தெரியவந்துள்ளது. நான் இறந்துவிடுவேனோ என்ற பயம் எனக்குள் அதிகரித்துள்ளது.

எனது நான்கு மகன்களின் கண்ணெதிலேயே நான் இறந்துவிடப்போகிறேன் என கவலையாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள மெக்னொல்ட்ஸ் நிறுவனம், உணவுத்தரம் மற்றும் பாதுகாப்பு கருத்தி தரனமாக உணவுகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இதுபோன்ற ஓரு அனுபவத்தை கேட்டதில்லை, இருப்பினும் இந்த தவறினை கருத்தி கொண்டு உடடியாக எங்கள் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்கிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும், Granfield குணமடைந்து எங்கள் உணவகத்திற்கு வர வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...