இதுவல்லவா காதல்! முகம் சிதைந்து பிறந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

Report Print Raju Raju in பிரித்தானியா

சிதைந்த முகத்துடன் பிறந்த பெண்ணுக்கு இதுவரை 18 ஆப்ரேஷன்கள் நடந்துள்ள நிலையில் இளைஞருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் கோடி ஹால் (25), இவர் பிறக்கும் போதே முகம் கோணலாக சிதைந்த நிலையில் இருந்துள்ளது.

ஹாலுக்கு ஆறு வயது ஆகும் வரை எந்தவொரு ஆப்ரேஷனும் முகத்துக்கு செய்யக்கூடாது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அதன் பின்னர் அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது.

தற்போது வரை ஹாலுக்கு 18 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன, இதன் காரணமாக அவரின் முகம் சாதாரண மனிதர்களை போல மாறியுள்ளது.

சிறுவயதிலிருந்து பலரின் கிண்டலுக்கு ஆளான ஹாலுக்கு திருமணம் நடக்குமா என அவர் நினைத்திருந்த நிலையில் லிவிஸ் ஹொல்ட் (27) என்பவருடன் எட்டு வருடங்களுக்கு முன்னர் ஹாலுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது காதலாக மாற கடந்த வாரம் இருவரும் நார்த்தண்ட்ஸ் கவுண்டியில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதுகுறித்து ஹால் கூறுகையில், சிறுவயதிலிருந்து என்னை எல்லோரும் வினோதமாக பார்ப்பதுடன், என் முகம் குறித்து என்னிடம் கேட்பார்கள்.

இது எனக்கு வருத்தமளிக்கும். தற்போது திருமணமான இந்த நாள் எனக்கு உணர்ச்சிகரமாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் ஒரு மகிழ்ச்சியான முடிவு உள்ளது என்பதை நான் என் வாழ்க்கையின் மூலம் எல்லோருக்கும் உணர்த்துகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...