லண்டனை தாக்கும் அளவுக்கு வடகொரியாவின் ஏவுகணை தயாராகும்: முன்னாள் இராணுவ தளபதி எச்சரிக்கை

Report Print Santhan in பிரித்தானியா

வடகொரியா இன்னும் 18 முதல் 20 மாதங்களில் லண்டனை வந்தடையும் அளவிற்கு ஏவுகணை ஒன்றை தயார் செய்துவிடும் என்றும், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால் அமெரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

சமீபத்தில் கூட ரஷ்யாவிற்கு ரகசிய கடிதம் ஒன்றை வடகொரியா அனுப்பியதாகவும், அதில் அமெரிக்காவை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் தாக்கலாம் என்று கூறப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் இராணுவதளபதி Richard Barrons எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் பிரித்தானியா இராணுவம் 20 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது என்றும் ஏனெனில் ரஷ்யாவின் பீரங்கிகள் மற்றும் ட்ரான்கள் போன்றவை உக்ரேனிய படைப்பிரிவுகளை 15 நிமிடங்களில் அழித்துவிட்டது.

அந்நாட்டுன் ஓப்பிடுகையில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம், வருடத்திற்கு 2 பில்லியன் பவுண்டுகள் காப்பீட்டிற்காக அளிக்கப்படுகிறது.

ஆனால் அது போதாது, நமது இராணுவ பலத்தை கூட்ட வேண்டும் என்றால் நிதியை கூட்ட வேண்டும். இப்படியே இருந்தால் ரஷ்யாவின் போர் அச்சுறுத்தல்கள எதிர்கொள்வது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.

அதே போன்று வடகொரியாவும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. 18 முதல் 20 மாதங்களில் வடகொரியா வலுவான ஏவுகணை ஒன்றை தயாரித்துவிடும்.

அது லண்டனை வந்து தாக்கும் அளவிற்கு இருக்கும் எனவும், அதை இடைமறித்து அழிப்பதற்கு நமது இராணுவத்தில் நவீனமயமாக்கப்பட்ட பீரங்கிகள், டிரான்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவைகள் கொண்டுவரப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...