பிரித்தானியாவின் White Widow சாலி ஜோன்ஸ் மகன் உயிருடன் இருக்கிறார்!

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவின் White Widow என்றழைக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி சாலி ஜோன்சின் மகன் JoJo உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவிலிருந்து கடந்த 2013ம் ஆண்டு 9 வயது மகனுடன் சிரியாவுக்கு சென்றவர் சாலி ஜோன்ஸ்.

அங்கு ஜூனைத் ஹீசைன் என்பவரை மணந்து கொண்டு, தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் 2015ம் ஆண்டு கணவர் இறந்த பின்னர், தீவிரவாத செயல்களில் அதிகம் ஈடுபடத்தொடங்கியதுடன் உலகை மிரட்டிய பெண் தீவிரவாதியாகவும் வலம்வந்தார்.

White Widow என்றழைக்கப்பட்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவருடைய மகனின் நிலை குறித்து தகவல்கள் தெளிவாக தெரியாத நிலையில், சாலி ஜோன்ஸ் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 30 மைல் தொலைவில் JoJo இருப்பதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த JoJo தற்போது பயப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் வசிக்கும் இவர்களது குடும்படும் JoJo உயிருடன் இருப்பதாகவே நம்புகின்றனர்.

ஏனெனில் சாலி ஜோன்ஸ் கொல்லப்பட்ட இடத்திலிருந்து JoJo இறந்ததற்கான எந்தவொரு டிஎன்ஏ தடயமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers