70வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார் எலிசபெத் மகாராணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் 70-வது ஆண்டு திருமண நாளை மிக எளிமையாக கொண்டாடினார்.

பிரித்தானியாவின் கடற்படை அதிகாரியான பிலிப்புக்கும், அந்நாட்டு மகாராணியான எலிசபெத்துக்கும் கடந்த 1947-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் திகதி திருமணம் நடைப்பெற்றது.

பிரம்மாண்டமாக நடந்த திருமணத்தில் உலகின் முக்கிய தலைவர்களும், பெரும் புள்ளிகளும் கலந்து கொண்டனர்.

உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக இருவரும் கடந்த 70 ஆண்டுகளாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், 96 வயதான பிலிப்பும், 91 வயதான எலிசபெத்தும் தங்களது 70-வது ஆண்டு திருமண நாளை எளிய முறையில் கொண்டாடியுள்ளனர்.

லண்டனில் உள்ள விண்டோர் கேஸ்டல் அரச குடும்ப வீட்டில் திருமண விழா கொண்டாடப்பட்டது.

இதில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக பக்கிங்காம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நாளையொட்டி எந்தவொரு பொது நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers