பிரித்தானியாவில் 42 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை வீழ்ச்சி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

வாழ்வதற்கான செலவினம் அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்களுக்கான தினசரி வருமானம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் 2017யை பொறுத்தவரையில் கடந்த மூன்று மாதங்களில் போனஸ் உட்பட தினசரி வருமானம் 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 14,000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், இதே காலகட்டத்தில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 59,000 முதல் 1.42 மில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜீன் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெரிய வீழ்ச்சியை சந்தித்தது, அந்த காலகட்டத்தில் 45,000 பணியாளர்கள் வேலையை இழந்தனர்.

கடந்தாண்டு 4.8% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் தற்போது 4.3% ஆக உள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை காட்டுவதாக வேலைவாய்ப்பு துறை அமைச்சர் Damian Hinds தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வேலையை தேடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும், வழக்கமான சம்பளத்துடன் கூடிய பணியில் நிரந்தரமாக இருக்க வழிவகை செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் இந்த அறிக்கை “டோரியின் பொருளாதார வீழ்ச்சி”க்கு மற்றொரு உதாரணம் என தொழிலாளர் கட்சியின் எம்பி Debbie Abrahams விமர்சித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers