இளம்பெண்ணை கற்பழித்த நபர்: கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Peterson Peterson in பிரித்தானியா
343Shares
343Shares
ibctamil.com

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தலைநகரான லண்டனுக்கு அருகில் உள்ள Walthamstow என்ற பகுதியில் பெயர் வெளிடப்படாத 22 வயதான பெண் ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, இளம்பெண்ணை Daniel Wallace(33) என்பவர் ரகசியமாக தொடர்ந்துள்ளார்.

வீடு வந்ததும் உள்ளே நுழைய முயன்றபோது திடீரென பெண் மீது பாய்ந்து கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர், இளம்பெண்ணிற்கு போதை மருந்து செலுத்தி மயக்கியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அவர் பல முறை கற்பழித்துள்ளார்.

மறு நாள் காலையில் இளபெண் எழுந்தபோது அவர் நிர்வாணமாகவும் உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், நபர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக அறிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதே சமயம், வீட்டை விட்டு வெளியேறி அந்த நபர் கிரிடிட் கார்டு உள்ளிட்ட முக்கிய பொருட்களை அள்ளிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை தொடங்கியபோது ஓர் நற்செய்தி கிடைத்துள்ளது.

கற்பழித்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரிடிட் கார்டை பயன்படுத்தி மெக்டொனால்ஸில் உணவு அருந்தியுள்ளார்.

கிரிடிட் கார்ட் தகவல்களை ரகசியமாக சேகரித்த பொலிசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

இளம்பெண்ணை கற்பழித்து பொருகளை திருடிய குற்றத்திற்காக குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்