லண்டன் தாக்குதலில் இஸ்லாமிய பெண் தவறாக சித்தரிப்பு: அம்பலமான உண்மை பின்னணி

Report Print Peterson Peterson in பிரித்தானியா
1286Shares
1286Shares
ibctamil.com

பிரித்தானிய தலைநகரான லண்டனில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் இஸ்லாமிய பெண் ஒருவரை தவறாக சித்தரித்து வெளியிட்ட புகைப்படம் போலியானது என தற்போது அம்பலமாகியுள்ளது.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 22-ம் திகதி பயங்கர தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

மர்ம நபர் ஒருவர் நடைமேடை மீது காரை செலுத்தி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதலின்போது நபர் ஒருவர் காயம் அடைந்து நடைமேடையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது, இஸ்லாமிய பெண் ஒருவர் தனது செல்போனில் பேசியப்படி அவருக்கு உதவி செய்யமால கடந்து செல்வது போன்று அப்புகைப்படம் வெளியானது.

நபர் ஒருவர் வெளியிட்ட அப்புகைப்படத்தை பார்த்த ஆயிரக்கணக்கான நபர்கள் ‘இரக்கமில்லாத இஸ்லாமிய பெண்’ என அவரை கண்டித்துள்ளனர்.

ஆனால், இதன் உண்மையான பின்னணி விபரம் தற்போது அம்பலமாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய அப்புகைப்படம் @SouthLoneStar என்ற டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டதும், அதனை ரஷ்ய குடிமகன் ஒருவர் வெளியிட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், வெறொரு பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்த நபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட படத்தோடு ஃபோட்டோஷொப் செய்து வெளியிட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

இஸ்லாமிய பெண்ணிற்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்ற அந்நபரின் செயலை தற்போது பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்