பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு

Report Print Fathima Fathima in பிரித்தானியா
168Shares
168Shares
ibctamil.com

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகும் முன்னர் இறுதி பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

2019 மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக விலகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வர்த்தகம், குடிமக்களுக்கான உரிமைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரித்தானியா விலகலுக்கு முன்னர் இறுதி ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கவும், ஆராய்ந்து வாக்களிக்க முடியுமே தவிர, குறித்த சட்டமூலத்தை நிராகரிக்கவோ அல்லது மாற்றங்களை மேற்கொள்ளவோ முடியாது.

இறுதி ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்த பிரதமர் தெரேசா மேவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்